போரை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த படங்கள்

போர் கதைகள்
போர், கடந்த சில வருடங்களாக உலகத்தில் நிறைய இடங்களில் போர் நடந்து வருகிறது. ஏன் நமது இந்தியாவே போரை எதிர்க்கொண்டு தான் வந்தது.
சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தது, அது மக்கள் அனைவருக்கும் பெரும் பதற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
சரி நாம் இப்போது தமிழ் சினிமாவில் வெளியான போரை மையப்படுத்தி வெளிவந்த படங்களை காண்போம்.
அரண்
மலையாள சினிமாவில் வெளியான கீர்த்தி சக்ரா திரைப்படத்தின் ரீமேக் இது. மேஜர் மகாதேவன் (மோகன்லால்) தலைமையிலான புகழ்பெற்ற மனிதர்களைக் கொண்ட உயரடுக்கு கட்டளைப் படையால் மேற்கொள்ளப்படும் பணிகளை பற்றியது.
நாட்டின் பயங்கரவாதக் குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்கும், அவர்களின் பயங்கரவாத நோக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும் அவர் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த குழுவில் ஹவில்தார் ஜெயக்குமார் (ஜீவா) முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத்பால் கோவிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிடும்போது, இந்த நபர்கள் தாக்குதலைத் தடுக்கிறார்கள், இறுதியில் ஜெயக்குமார் மகாதேவனைக் காப்பாற்றுகிறார், அவர் தீவிரவாதிகளைக் கொன்று தனது உயிரைக் கொடுக்கிறார்.
மேஜர் ரவி இயக்கிய இப்படம் கடந்த ஜுலை 2006ம் ஆண்டு வெளியானது.
வாரணம் ஆயிரம்
கடந்த 2008ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ரமிரா ரெட்டி, சிம்ரன் என பலர் நடித்த வெளியான திரைப்படம்.
ராணுவ அதிகாரி மேஜர் சூர்யா, ஒரு அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கும் நேரத்தில் அவருடைய தந்தை மரணச் செய்தி வருகிறது.
மனம் உடைந்து போனாலும் தந்தை சொல்லிக் கொடுத்த கடமையுணர்வு பாதியில் அவரைத் திரும்ப விடாமல் தொடர்ந்து அந்த மீட்புப் பணியில் இறங்க வைக்கிறது.
பிளாஷ்பேக்கில் தந்தையின் நினைவுகள் ஓடுகின்றன.
ஐ லவ் இந்தியா
கடந்த 1993ம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார், பிரியா, செண்பகம், மனோரம்மா ஆகியோர் நடிக்க வெளியான படம் ஐ லவ் இந்தியா.
பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரில் திவாகர் உறுதியாக இருக்கிறார், மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒரு கும்பலைப் பின்தொடர்கிறார்.
அவர்கள் தனது சகோதரியைக் கொடூரமாகக் கொன்றாலும், அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி காண்பதே படத்தின் கதை.
வாகா
கடந்த 2016ம் ஆண்டு விக்ரம் பிரபு, ரன்யா ராவ் நடிப்பில் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் வெளியான படம் வாகா.
காஷ்மீரில் கலவரம் வெடித்தபோது ஒரு இந்திய சிப்பாய் ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார், அங்குள்ள பாகிஸ்தானியர்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளுக்கும் மத்தியில், அவர் தனது காதலியை பாகிஸ்தானில் உள்ள அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
விறுவிறுப்பின் உச்சமாக இந்தியா-பாகிஸ்தானை மையப்படுத்திய ஒரு கதை.
அமரன்
வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அமரன்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிக்க இராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்தனர்.
படத்தில் இடம்பெற்ற ஜி.வி.பிரகாஷ் இசை படத்திற்கு செம ஹைலைட்டாக அமைந்தது. காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது அமரன் படம்.
முகுந்த் ராணுவத்தில் சேர்ந்தது முதல் காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்க்கொண்டு இறுதியில் வீரமரணம் அடைந்தது வரை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
2024ம் ஆண்டு வெளியான படங்களில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது படம்.