பெருசு திரை விமர்சனம்

பெருசு திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் பல அடல்ட் காமெடி படங்கள் வந்துள்ளது, இதில் ஒரு சில படங்கள் மட்டுமே முகம் சுளிக்காமல் கொண்டாடும் படி இருக்கும், அந்த மனநிலையை ட்ரைலரிலேயே கொண்டு வந்த இந்த பெருசு எப்படியுள்ளது, பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே வைபவ் அப்பா ஒரு இளைஞன் பெண்கள் குளிப்பதை பார்ப்பதை தெரிந்து கோபமாக அறைந்துவிட்டு ஒழுங்காக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வீட்டிற்கு செல்கிறார்.

வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு அப்படியே இறந்து போகிறார், விஷயம் அதுவில்லை, அவர் இறக்கும் போது சொல்ல முடியாத ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

அந்த பிரச்சனை முடித்தால் தான் அப்பா இறந்ததையே வெளியே சொல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது வைபவ் அவருடைய அண்ணன் மற்றும் குடும்பத்தினருக்கு.

அந்த வெளிய சொல்ல முடியாத பிரச்சனையை தீர்த்தார்களா, அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்தார்களா என்பதே மீதிக்கதை.
 

படத்தை பற்றிய அலசல்

பெருசு இப்படி ஒரு கதைக்களம் அதுவும் தமிழில் யோசித்ததே பெரிய விஷயம், அதையும் முடிந்த அளவிற்கு முகம் சுளிக்காத படி ஒரு குடும்பத்தை சுற்றியே சொன்ன விதம் சூப்பர்.

அதிலும் ஆரம்பத்திலேயே சரக்கு போட்டு விட்டு படம் முழுவதும் போதையிலேயே வைபவ் பேசுவது போல் காட்டியது இயக்குனரின் புத்துசாலித்தனம். வைபவ் அண்ணன் சுனில் என்ன செய்வது என்ற தெரியாமல் எப்படி இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அவர் திக்கு முக்காடி அவர் கொடுக்கும் ரியாக்ஸன் ரசிக்க வைக்கிறது.

அதிலும் அந்த பிரச்சனையை தீர்க்க டாக்டர், கால்நடை மருத்துவர் ஏன் சாமியார் வரை செய்யும் கலாட்டா முதல் பாதி செம ரகளை, வைபவ் அம்மா, அண்ணி சாந்தினி, காதலி நிகாரிகா, நண்பர் பாலசரவணன் என எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

அதோடு தீபா, முனிஷ்காந்த், எல்லாத்தையும் ஒட்டு கேட்கும் பக்கத்துவிட்டு கமலாக்கா என அனைத்து கதாபாத்திரங்களும் செம யாதர்த்தம்.

அப்பாவின் மானம் போகாமல் எப்படியாவது அடக்கம் செய்ய வேண்டும் என போராடும் குடும்பம், அதை சுற்றி பல குழப்பங்களை காமெடியாகவே காட்டிய விதம் இயக்குனர் இளங்கோ ராம் இயக்குனராகவே வெற்றி பெற்றுள்ளார்.

படத்தின் டெக்னிக்கல் டீம் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர், இத்தனை ப்ளஸ் இருந்தாலும் கான்செப்ட் ஏடாகூடாம இருப்பதால் ஒரு சிலருக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கலாம்.   

க்ளாப்ஸ்


படத்தின் கதைக்களம்


நடிகர், நடிகைகள் பங்களிப்பு

படத்தின் முதல் பாதி, கிளைமேக்ஸ்


பல்ப்ஸ்


இரண்டாம் பாதி சுற்றி சுற்றி ஒரே இடத்திற்கு வருவதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக்கிருக்கலாம்.


மொத்தத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து கொண்டாடும் குடும்ப படமாக வந்துள்ளது இந்த பெருசு.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *