பிரம்மாண்டமாக உருவாகும் ஷங்கரின் வேள்பாரி.. ஹீரோ இந்த முன்னணி நடிகரா

ஷங்கரின் வேள்பாரி
ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்துவிட்டன. ஆனாலும், இந்தியன் 3 படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் முழுமையாக வேள்பாரி படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான தயாரிப்பாளர் கிடைத்துவிட்டதாகவும், தற்போது பட்ஜெட்டை இறுதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஷங்கரின் கனவு படமான வேள்பாரி மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. கண்டிப்பாக இப்படத்தின் மூலம் உலக சினிமாவிற்கே தான் யார் என்பதை மீண்டும் புரிய வைப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
வேள்பாரி ஹீரோ
சூர்யா, விக்ரம், ரன்வீர் சிங் போன்ற நடிகர்களின் பெயர் வேள்பாரி படத்தின் ஹீரோ பட்டியலில் அடிபட்டு வந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் என்னவென்றால், ஷங்கரின் வேள்பாரி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இதுமட்டும் நடந்தால் ஷங்கர் – தனுஷ் முதல் முறையாக கூட்டணி அமையும் படம் வேள்பாரியாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.






