பிரபுதேவாவின் ஹிட் பட இயக்குனர் உயிரிழப்பு…

பிரபுதேவா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஹிட் படம் அமையும். அப்படி பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய்.
பட கதை, நடிகர்கள், பாடல்களை தாண்டி படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இப்போதும் ஹைலைட்டாக கொண்டாடப்படும்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தயாரான இந்த படத்தை நாராயண மூர்த்தி இயக்கியிருந்தார்.
தற்போது என்ன தகவல் என்றால் இப்பட இயக்குனர் நாராயண மூர்த்தி நேற்று (செப்டம்பர் 23) உயிரிழந்துள்ளார்.