பிரபல தமிழ் சினிமா நடிகர் மதன் பாபு காலமானார்

மதன் பாபு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மதன் பாபு.
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நீங்கள் கேட்டவை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.
விஜய்யின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார்.
71 வயதாகும் மதன் பாபு சென்னை அடையாறு இல்லத்தில் வசித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.