பின்வாங்க முடியாது.. துரந்தர் 2 உடன் மோதலை உறுதி செய்த யாஷ்


கேஜிஎப் படங்கள் இந்திய அளவில் பிரம்மாண்ட ஹிட் ஆன பிறகு யாஷ் pan இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். அவர் தற்போது நடித்து வரும் டாக்சிக் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

டாக்சிக் படம் 2026 மார்ச் 19ம் தேதி ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஹிந்தி படமான துரந்தர் 2 படம் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் டாக்சிக் படம் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது என ஒரு செய்தி பரவியது.

பின்வாங்க முடியாது.. துரந்தர் 2 உடன் மோதலை உறுதி செய்த யாஷ் | Yash Confirms Clash With Dhurandhar The Revenge

பின்வாங்க முடியாது

இந்நிலையில் சொன்ன தேதியில் டாக்சிக் படம் ரிலீஸ் ஆகும், பின்வாங்க முடியாது என யாஷ் தரப்பு தெரிவித்து இருக்கிறது.

கடந்த வருடம் மார்ச் மாதத்திலேயே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். துரந்தர் 2 அதே தேதியில் வருகிறது என்றால் அதை பற்றி ஒரு மரியாதைக்காவது எங்களிடம் பேசி இருக்க வேண்டும். தென்னிந்தியாவில் ரிலீஸ் தேதி பற்றி மற்ற தயாரிப்பாளர்களிடம் பேசுவார்கள், அந்த பழக்கம் ஹிந்தி சினிமாவில் சுத்தமாக இல்லை என யாஷ் காட்டமாக பேசினாராம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *