பிக் பாஸ் டிஆர்பி இவ்வளவு தானா.. அதள பாதாளத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பிரபலமான ஒன்று. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலவேறு சர்ச்சைகளும் இந்த நிகழ்ச்சி மூலமாக ஏற்படுவதுண்டு.
தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் பிக் பாஸ் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த அனைத்து மொழிகளிலும் எவ்வளவு டிஆர்பி ரேட்டிங் வந்திருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதள பாதாளத்தில் தமிழ், ஹிந்தி
பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் எண்டேமோல் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புள்ளி விவரப்படி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் தான் நல்ல ரேட்டிங் பெற்று இருக்கின்றன. அதிகபட்சமாக மலையாளம் 12.1 ரேட்டிங் பெற்று இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸுக்கு 5.61 புள்ளிகள் மட்டுமே கிடைத்து இருக்கிறது.
மேலும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் தான் கவலைக்கிடமாக இருக்கிறது. அதற்கு வெறும் 1.8 ரேட்டிங் தான் கிடைத்து இருக்கிறது.