பிக் பாஸ் ஜூலி திருமணத்திற்கு தேர்வு செய்த தேதி.. பின்னால் இப்படி ஒரு விஷயமா

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பிரபலம் ஆகி அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்தவர் ஜூலி. அந்த ஷோவில் அவர் சொன்ன ஒரு பொய்க்காக பல வருடங்களாக நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர்.
அதை எல்லாம் தாண்டி படங்கள், சீரியல் என நடித்து வந்தார் ஜூலி. சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்த போட்டோவை வெளியிட்டு திருமணத்தை அறிவித்து இருந்தார் ஜூலி.
தேதி
2026 ஜனவரி 16ம் தேதி அவர் திருமணம் நடக்க இருக்கிறதாம். சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் சர்ச்சில் அந்த திருமணம் நடக்க இருக்கிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலம் ஆனதால் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் அவர் திருமணத்தை நடத்துகிறாரோ என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.






