பிக் பாஸுக்கு பின் மீண்டும் ஆடலும் பாடலும் மேடையில் ரம்யா ஜோ! சம்பளம் எவ்வளவு வாங்கினார் தெரியுமா

பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரம்யா ஜோ. அவர் கடந்த வாரம் தான் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு இருந்தார்.
வெளியில் வந்த பிறகு மீண்டும் அவர் திருவிழாவில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆட தொடங்கி இருக்கிறார்.
வைரலாகும் வீடியோ
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மேடையில் ரம்யா பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
“நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதற்கு நீங்க தான் காரணம். 70 நாள் அங்கே இருந்தேன். நீங்கள் ஓட்டு போட்டதால் தான் அங்கே இருந்தேன்” என அங்கிருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பிக் பாஸ் சென்றதற்கு வாரம் 50 ஆயிரம் வீதம் சுமார் 4.5 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றது குறிப்பிடத்தக்கது.






