பாண்டி தனது கடைக்கு யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?.. அய்யனார் துணை புதிய புரொமோ

அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது அய்யனார் துணை சீரியல்.
குடும்பங்கள் கொண்டாடும் அண்ணன்-தம்பிகள் கதை என்றாலும் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிறது. ஒருவழியாக பல்லவன்-அம்மா பிரச்சனை முடிவடைந்து அவரை பற்றிய உண்மையும் நடேசன் மூலமாக வெளியே வந்துவிட்டது.
அடுத்த கதைக்களமாக பாண்டியின் புதிய கதை திறப்பு பற்றிய விஷயங்கள் காட்டப்பட்டது. இன்னொரு பக்கம் சேரன், பாண்டியன் தங்களது காதலிகளுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் கடைசி எபிசோடில் ஒளிபரப்பானது.
புரொமோ
தற்போது சீரியல் பற்றிய புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அனைவரும் பாண்டியின் புதிய கடைக்காக வேலை செய்கிறார்கள்.
பாண்டி யார் பெயரை கடைக்கு வைத்திருப்பார் என எல்லோரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்க அவர் தனது அண்ணன் சேரன் பெயரை கடைக்கு வைத்துள்ளார்.
கடைக்கு தனது பெயரை பாண்டி வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் சேரன் செம எமோஷ்னல் ஆகிறார். இதோ புதிய புரொமோ,






