பாண்டியன் ஊரில் இல்லாத நேரம் பார்த்து வானதி குடும்பம் செய்யும் சதி… அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்

அய்யனார் துணை
விஜய் டிவியில் இந்த வருட ஆரம்பத்தில் சில புதுமுகங்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் அய்யனார் துணை சீரியல்.
அண்ணன்-தம்பிகளின் பாசக் கதையை கூறும் வகையில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் அடுத்தடுத்து விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் நடேசன் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இன்றைய எபிசோடில் நிலா பயம் இருந்தாலும் தனது குடும்பத்திற்காக தீச்சட்டி எடுக்க முடிவு செய்கிறார்.
பின் தீச்சட்டி சூட்டை பொறுத்துக்கொண்டு நிலா பரிகாரத்தை நல்லபடியாக முடிக்கிறார். அவரது கை சூட்டில் வெந்துபோக சோழன் எங்கெங்கோ தேடி ஐஸ்கட்டி காட்டி நிலா கையில் வைக்கிறார்.
அடுத்த ஸ்டோரி
குலதெய்வ கோவிலில் குடும்பத்தினர் சாமி கும்பிட இன்னொரு பக்கம் வானதி அண்ணன் சதி செய்கிறார்.
அதாவது பாண்டி ஊரில் இல்லாததை தெரிந்துகொண்டு வானதிக்கு அவரது அண்ணன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். வானதியை கோவிலுக்கு பொங்கல் வைக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு வானதிக்கு திருமணம் நடக்குமா இல்லை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.