பட ரிலீஸ் பிறகு அந்த நடிகர் தான் Talk Of The Town ஆக இருப்பார்.. கூலி பட விழாவில் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த நாள் வந்துவிட்டது, அதாவது கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தான்.
இன்று பிரம்மாண்டமாக படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள நிகழ்ச்சி சூப்பராக நடந்து வருகிறது. தற்போது நாம் கூலி படத்தின் Captain Of The Ship இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது பற்றி பார்ப்போம்.
அவர் பேசுகையில், சௌபின் பட ரிலீஸிற்கு பிறகு Talk Of The Townஆக இருப்பார். அவர் சென்னைக்கே தனது வீட்டை மாற்றிக் கொள்ளலாம், அவரை தங்களது படங்களில் கமிட் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர்.
உபேந்திரா– Dedicated நபர், மற்ற பட வேலைகள் இருந்தாலும் எனக்கு சில படப்பிடிப்புகளில் உதவி செய்தார்.
ஸ்ருதிஹாசன்– கடந்த 2 வருடங்களில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவர், நடிப்பு பாடல் பாடுவது என இருக்கிறார்.
நாகர்ஜுனா– இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க ஓகே வாங்குவதற்கு கொஞ்சம் காலம் எடுத்தது, ஆனால் செம மாஸாக நடித்துவிட்டார்.
அமீர்கான்– எனக்கும், அவருக்கும் ஒரேநாள் பிறந்தநாள் என்பது பெருமையான விஷயம். அவரை இயக்க வேண்டும் என்பது கனவு, அது இப்படத்தில் நடந்து விட்டது என பேசியுள்ளார்.