படங்கள் நடிக்க இடைவெளி ஏன்?.. மனம் திறந்த நடிகை திவ்ய பாரதி!

படங்கள் நடிக்க இடைவெளி ஏன்?.. மனம் திறந்த நடிகை திவ்ய பாரதி!


திவ்ய பாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

கடைசியாக இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

படங்கள் நடிக்க இடைவெளி ஏன்?.. மனம் திறந்த நடிகை திவ்ய பாரதி! | Divya Bharthi Open About Her Gap

இடைவெளி ஏன்?

இந்நிலையில், நடிகை திவ்ய பாரதி அவரது அடுத்த படம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” பேச்சுசுலர் படத்திற்கு பின் நான் நடிக்கும் படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன். எனது முதல் 10 படங்களை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளேன்.

வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. நான் தான் யோசிக்கிறேன், அனைத்தும் நல்லதாகவே நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.  

படங்கள் நடிக்க இடைவெளி ஏன்?.. மனம் திறந்த நடிகை திவ்ய பாரதி! | Divya Bharthi Open About Her Gap


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *