நாயகனாக நடிக்கும் ஆசை உள்ளதா?.. ரெடின் கிங்ஸ்லி சொன்ன ரகசியம்!

ரெடின் கிங்ஸ்லி
தமிழ் சினிமாவில் இப்போது பிஸியாக நடித்துவரும் காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ளார் ரெடின் கிங்ஸ்லி.
நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அவரது திரைப்பயணம் அமோகமாக தொடங்க அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடிக்கிறார்.
ஆசை உள்ளதா?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரெடின் பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” கோலமாவு கோகிலா’ பட வாய்ப்பை நெல்சன் எனக்கு தந்தார். இப்போது நன்றாகத்தானே போய் கொண்டிருக்கிறது. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். நான் ஹீரோ மெட்டீரியல் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
இந்த முகத்தை, இந்த உயரத்தை கேட்கும் கதையில், அந்த கதையின் நாயகனாக வேண்டுமானால் நான் நடிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.