நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


ஏஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்திருந்தார்.

இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் மீண்டும் ஏஸ் படத்திற்கு இணைந்தனர்.

நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Ace Movie 4 Days Box Office

இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். இது இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். மேலும் யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல்

இந்த நிலையில், நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Ace Movie 4 Days Box Office

அதன்படி, இப்படம் 4 நாட்களில் ரூ. 5.9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *