நடிகை ராஷ்மிகா கர்ப்பமா? திருமணம் ஆன ஒரே மாதத்தில் போட்ட பதிவு! உண்மை இதுதான்

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் பிப்ரவரி 26 ஆம் தேதி குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து தாய்லாந்துக்கு இருவரும் ஜோடியாக ட்ரிப் சென்றிருந்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி இருந்தது.
அவர்கள் திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது ராஷ்மிகா கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
உண்மை இதுதான்
“இப்போது நாங்கள் மூன்று பேர்” என ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருப்பது தான் இப்படி ஒரு செய்தி பரவுவதற்கு காரணம்.
நெட்டிசன்களும் அவர் கர்ப்பமாக இருப்பதை தான் அறிவித்திருக்கிறார் என நினைத்துக்கொண்டு கமெண்டுகளில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாக இல்லையாம். ராஷ்மிகா இரண்டாவதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருக்கிறார். Ru என்கிற கற்பனை கதாபாத்திரத்துடன் அவர் பேசுவது போல அனிமேஷன் புகைப்படங்களை அந்த கணக்கில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
அந்த அனிமேஷன் கதாபாத்திரம் மற்றும் விஜய் தேவரகொண்டா உடன் ராஷ்மிகா இருப்பதை தான் மூன்று பேர் என குறிப்பிட்டு அவர் போட்டோவாக பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு தான் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவுவதற்காக காரணமாக அமைந்து விட்டது.






