நடிகை சுவாசிகா கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட்..

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சுவாசிகா. இதை தொடர்ந்து மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் கருப்பு படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
நடிகை சுவாசிகாவின் கணவர் பிரபல சீரியல் நடிகர் பிரேம் ஜேக்கப். இவர்கள் இருவருக்கும் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரேம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீ நான் காதல் சீரியல் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து தற்போது அழகே அழகு சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சுவாசிகா – பிரேம் ஜேக்கப் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:






