நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்த்திரன் சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தது சர்ச்சை ஆனது.
அதை தொடர்ந்து இன்று அதிமுக எம்பி சிவி சண்முகம் பேசும்போது, ‘எனக்கு நயன்தாரா வேண்டும், சிஎம் கொடுப்பாரா’ என மோசமாக பேசி இருப்பதற்கு கடும் கண்டனங்கள் வர தொடங்கி இவர்கிறது.
குஷ்பு ஆவேசம்
இந்த விவகாரம் பற்றி நடிகை குஷ்பு ஆவேசமாக பேசி இருக்கிறார்.
“பெண்கள், நடிகைகள் உங்கள் சொத்து அல்ல, உங்கள் பேச்சுப் பொருள் அல்ல, அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல.”
“மற்றவர்களைக் கேலி செய்வதற்கோ அல்லது ஒரு கருத்தை நிரூபிப்பதற்கோ ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்துவது, பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது” என குஷ்பு பதிவிட்டுள்ளார்.
பெண்கள் — குறிப்பாக பெண் நடிகர்கள் — உங்கள் சொத்து அல்ல, உங்கள் பேச்சுப் பொருள் அல்ல, அல்லது ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும்போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டம் அல்ல.
ஒரு பெண் நடிகரின் பெயர், மலிவான நகைச்சுவைகளுக்கோ, அற்பமான அவமானங்களுக்கோ, அல்லது…
— KhushbuSundar (@khushsundar) March 17, 2026






