நடிகர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கடும் நெரிசல்.. 34 பேர் பலி

நடிகர் விஜய் இன்று கரூரில் அரசியல் பிரச்சாரத்தில் சென்ற நிலையில் அவரை பார்க்க பல ஆயிரம் பேர் கூடி இருக்கின்றனர்.
விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என அதிகம் ரசிகர்கள் கூடிவிட்ட நிலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
31 பேர் பலி
கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் வரை பலி ஆகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. 6 குழந்தைகள், 16 பெண்கள் ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர்.
ஏராளமானோர் கரூர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியும் ஏற்பட்டு இருக்கிறது.
40 பேர் வரை தீவிர சிகிச்சையில் இருப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது.






