நடிகர் மோகன்லால் வீட்டில் துயரம்.. 90 வயதில் அம்மா மரணம்!

நடிகர் மோகன்லால் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
மோகன்லாலின் அம்மா சாந்தகுமாரிக்கு 90 வயதாகும் நிலையில் இன்று கொச்சியில் இருக்கும் அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
உடலில் Neurological பிரச்சனைகள் காரணமாக சாந்தகுமாரி கடந்த பல வருடங்களாக சிகிச்சையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் இரங்கல்
கொச்சியில் மோகன்லால் ஷூட்டிங்கில் இருந்த நிலையில் தாய் இறந்த விஷயம் கேட்டு வீட்டுக்கு ஓடி இருக்கிறார்.
அவருக்கு அஞ்சலி செலுத்த மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி மலையாள சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று இருக்கின்றனர்.
மோகன்லால் அம்மா மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






