நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் காதல் படம் ரீ-ரிலீஸ் ஆகிறதா?… உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் காதல் படம் ரீ-ரிலீஸ் ஆகிறதா?… உற்சாகத்தில் ரசிகர்கள்


சூர்யா

தமிழ் சினிமாவில் வழக்கமாக இப்போது ஒரு டிரெண்ட் உருவாகியுள்ளது.

வேறு என்ன டாப் நடிகர்களின் பழைய ஹிட் படங்கள் தான் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. கடைசியாக விஜய்யின் கில்லி, அஜித்தின் மங்காத்தா படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.

நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் காதல் படம் ரீ-ரிலீஸ் ஆகிறதா?... உற்சாகத்தில் ரசிகர்கள் | Actor Suriya Super Hit Movie Re Release

என்ன படம்


நடிகர் சூர்யா திரைப்பயணத்தில் அமைந்த வெற்றிப் படங்களில் ஒன்று தான் மௌனம் பேசியதே.

கடந்த 2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் தயாரான இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான காதல் படமாக அமைந்தது. இப்போது உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப படம் மெருகேற்றப்பட்டு இப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் காதல் படம் ரீ-ரிலீஸ் ஆகிறதா?... உற்சாகத்தில் ரசிகர்கள் | Actor Suriya Super Hit Movie Re Release

இப்படம் மூலம் சூர்யா-த்ரிஷா ஜோடி ஹிட்டானார்கள், இருவருக்குமே படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
நடிகர்கள், படத்தின் கதையை தாண்டி ஹைலைட்டான ஒரு விஷயம் என்னவென்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான்.

தற்போது இப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்த தகவல் வந்ததும் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துவிட்டனர், ஆனால் எப்போது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *