‘த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது தவறு’
நடிகை த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது, அவர் வாழ்க்கையில் தலையிடுவது தவறு என பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா
சமீபகாலமாக நடிகை த்ரிஷா குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தன்னைப்பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் தன் மனதிற்கு பட்டதை செய்து வருகிறார் நடிகை த்ரிஷா.
சஞ்சனா கல்ராணியின் கருத்து
இந்நிலையில், த்ரிஷாவை குறிவைத்து தாக்குவது போன்ற விமர்னங்கள் தவறு என நடிகை நிக்கி கல்ராணியின் தங்கையும் பிரபல பாலிவுட் நடிகையுமான சஞ்சனா கல்ராணி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சமீபகாலமாக த்ரிஷாவை குறிவைத்து பலரும் விமர்சிக்கிறார்கள். ஒரு பெண்ணை பற்றி இப்படி விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. யுகங்கள் அடிப்படையில் ஒரு நடிகையை விமர்சிப்பது பெரும் தவறு. த்ரிஷாவின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு”.
“தனக்கு பிடித்ததை பேச, செய்ய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதில் த்ரிஷாவும் விதிவிலக்கல்ல. எனவே ஒரு நடிகையாக, ஒரு பெண்ணாக அவரை மதியுங்கள். வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
