துபாயில் சிக்கி இருந்த நடிகர் அஜித் சென்னை திரும்பினார்.. ஏர்போர்ட் வீடியோ

நடிகர் அஜித் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக அவர் துபாயில் தான் இருந்தார். அவரை பல பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்த புகைப்படங்களும் அடிக்கடி வைரல் ஆகி இருந்தன.
சமீபத்தில் இஸ்ரேல் – ஈரான் போர் வெடித்த நிலையில் துபாய் உள்ளிட்ட பல இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. அதனால் விமான சேவைகள் ரத்து ஆனது, இந்தியா திரும்ப முடியாமல் அஜித் அங்கேயே இருந்தார்.
சென்னை திரும்பிய அஜித்
இந்நிலையில் அஜித் இன்று சென்னைக்கு திரும்பி இருக்கிறார்.
அவர் விமானத்தில் சென்னை வந்திறங்கிய நிலையில் காரில் லக்கேஜ்களை ஏற்றி கிளம்பி செல்லும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
#Ajithkumar is back to Chennai ♥️ pic.twitter.com/rjzgMemKkQ
— AmuthaBharathi (@CinemaWithAB) March 10, 2026






