திருமணமே வேண்டாம்.. இதை பார்த்தால் அதர்வா அம்மாவே சொல்வாராம்

அதர்வா ஹீரோவாக நடித்து இருக்கும் DNA படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதில் அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்து இருக்கிறார்.
DNA படத்தில் அதர்வா முதல் முறையாக குழந்தை பெற்றுக்கொண்ட அப்பாவாக நடித்து இருக்கிறார்.
திருமணமே வேண்டாம்
அப்பாவாக நடித்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற்ற பலரையும் பார்த்து இருக்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்களை பார்த்து தான் என் நடிப்பை எடுத்து இருக்கிறேன்.”
“இந்த படத்தை என் அம்மா பார்த்தார். இதை பார்த்துவிட்டு அம்மா எனக்கு திருமணமே வேண்டாம் என சொல்வார் என நினைக்கிறேன்” என அதர்வா கூறி இருக்கிறார்.