திருமணத்தை கொண்டாட வித்தியாசமாக யோசித்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா! குவியும் வாழ்த்து

பொதுவாக பிரபலங்கள் திருமணம் என்றால் அது மிக மிக பிரம்மாண்டமாக நடக்கும். அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களே அசந்து போகும் அளவுக்கு எல்லாம் நடக்கும்.
சமீபத்தில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரது திருமணமும் அப்படி தான் நடந்தது. ஆனால் அவர்கள் தங்களது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் உடனும் கொண்டாட வேண்டும் என வித்தியாசமாக சில விஷயங்கள் செய்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் முக்கிய கோவில்களில் அன்னதானம் செய்தனர். மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர்கள் மக்களுக்கு ஸ்வீட் விநியோகம் செய்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.
44 அரசு பள்ளிகள்
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் அச்சம்பட்டு பிரிவில் இருக்கும் 44 அரசு பள்ளிகளில் படிக்கும் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்போவதாக தற்போது அறிவித்து இருக்கின்றனர்.
இதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Vijay Deverakonda starting Scholarship Scheme for 9th &10th class students from this year 💥
Great idea which helps students for their future education without any financial struggle
Vijay Deverakonda ❌
VIjay BANGARUKONDA ✅#VijayDeverakonda #Ranabaali #rashmikamandana pic.twitter.com/UotlV28SM8
— 𝗧𝗛𝗘 𝗬𝗔𝗗𝗔𝗩 (@theyogayadav) March 2, 2026






