திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை எப்படி உள்ளது.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை எப்படி உள்ளது.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், பல கலைஞர்களை போல இவரும் நிறைய எதிர்மறை விமர்சனங்களை தாண்டி வந்தவர் தான்.

தனது அப்பாவின் தயாரிப்பில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இடையில் படிப்பில் கவனம் செலுத்தியவர் இப்போது முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், சமீபத்தில் பாலிவுட் என அவரது சினிமா பயணம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை எப்படி உள்ளது.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் | Keerthy Suresh Talks About Her Marriage Life

ஓபன் டாக்

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கடந்த வருட கடைசியில் அவரது நீண்டநாள் நண்பர் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை எப்படி உள்ளது.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் | Keerthy Suresh Talks About Her Marriage Life

திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ், தான் நடித்துள்ள முதல் ஹிந்தி படமான பேபி ஜான் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து தல பொங்கலையும் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் எனது கணவருக்கு இது புதுசு, இன்ஸ்டாவையே பிரைவேட்டாக தான் வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின் தனது வாழ்க்கை எப்படி உள்ளது.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக் | Keerthy Suresh Talks About Her Marriage Life

அவர் கூச்ச சுபாவம் கொண்டவர், மீடியா அட்டென்ஷன் எல்லாம் அவருக்கு கிடையாது. எனக்கு பழகிவிட்டது, எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ எடுக்கிறாங்க, எப்போதும் போலவே உள்ளது.

என்னுடைய கணவருக்கு இந்த ஒரு விஷயம் தான் சங்கடத்தை கொடுக்கிறது, ஆனாலும் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்கிறார் என்றார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *