திருமணத்திற்கு ஓப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ

சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ரோஹினி, ஸ்ருதியின் அம்மாவிடம் பணம் வாங்கியுள்ளார், அது எப்போது பூகம்பமாக வெடிக்கும் என தெரியவில்லை. இதற்கு இடையில் முத்து தனது மனம் மாறி சீதா-அருண் திருமணத்திற்கு மனதார ஒப்புக் கொள்கிறார்.
முத்து மாற்றத்தை கண்டு மீனா மற்றும் அவரது அம்மா செம சந்தோஷம் அடைகிறார்கள். அண்ணாமலையும் முத்து மாற்றத்தை கண்டு பெருமைப்படுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில், அருண் சீதா வீட்டிற்கு பெண் கேட்டு வருகிறார். வீட்டிற்கு வந்த அருண், முத்துவை அசிங்கப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
எனது கல்யாணம் எப்போதோ நடக்க வேண்டியது, தேவையில்லாமல் இவ்வளவு தூரம் இழுக்க வேண்டியதாக போய்விட்டது.
திருமணத்திற்கு உயரிய அதிகாரிகள் வருவார்கள், அங்கு யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது என முத்துவை பார்த்து கூறுகிறார்.