திடீரென ரோஹினி பற்றி சொல்லி கண்ணீர்விட்டு அழுத மனோஜ்… சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

சிறகடிக்க ஆசை
வாழ்க்கை கிடைக்க ஒரு பெண் இப்படியெல்லாம் செய்வாளா என மக்கள் கோபம் கொள்ளும் அளவிற்கு நிறைய விஷயங்கள் செய்துள்ளார் ரோஹினி.
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மனோஜ்-ரோஹினி பிரச்சனையை முதலில் முடித்து கதையை நகர்த்துங்கள் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு இந்த விவாகரத்து வழக்கு செல்கிறது.
சாமியாரை வைத்து தன்னை ஏமாற்றியது ரோஹினி தான் என தெரிந்ததும் மனோஜ்-விஜயா ஒரு நபரை வைத்து ரோஹினியை வெளுத்து வாங்க அவர் மாதர் சங்கத்தில் புகார் அளித்துவிட்டார். அவருக்கு விஜயா லஞ்சம் கொடுக்க இப்போது விவாகரத்து வழக்கில் மனோஜ் பக்கம் ஆதாரம் இல்லாமல் இருக்கிறது.
புரொமோ
இன்றைய எபிசோடில், இந்த விவாகரத்து வழக்கில் இருக்கும் ஒரே தீர்வு அந்த மாதர் சங்க அதிகாரியிடம் ரோஹினி செய்த விஷயங்கள் குறித்து சொல்வது தான் என கூறுகிறார்.
இதனைக் கேட்ட முத்து-மீனா, மனோஜை அந்த அதிகாரியிடம் பேச கூறுகிறார்கள், ஆனால் அவரோ திமிராக நான் ஏன் அவரிடம் கெஞ்ச வேண்டும் என்கிறார்.
தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், மனோஜ், முத்து-மீனா, 3 பேரும் அந்த மாதர் சங்க அதிகாரியை சந்திக்கிறார்கள். அவர்களிடம் மனோஜ், ரோஹினியை முதலில் காதலித்து ஆசையாக திருமணம் செய்துகொண்டேன். பின் அவள் எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்பதை அழுதபடி மனோஜ் கூறுகிறார்.
இதோ அந்த புரொமோ,






