தலைவன் தலைவி 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தலைவன் தலைவி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
மேலும் செம்பன் வினோத், தீபா, சரவணன், ஆர்.கே. சுரேஷ், யோகி பாபு, மைனா நந்தினி, காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தலைவன் தலைவி திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 68 கோடி வசூல் செய்துள்ளது.