தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள்

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள்

சினிமா

உலக மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று சினிமா.

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை-சின்னத்திரை இரண்டையுமே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்போது இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் குறித்து தான்.

அரசியல், விளையாட்டு என பல துறைகளில் சாதித்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் நிறைய வெளியாகியுள்ளது, அப்படி தமிழில் வெளியாகி இருந்த சிறந்த படங்கள் குறித்து பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

பெரியார்

தந்தை பெரியாரின் வாழ்க்கையை மையப்படுத்தி கடந்த 2007ம் ஆண்டு பெரியார் திரைப்படம் வெளியாகி இருந்தது. சத்யராஜ் பெரியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க ஞான ராஜசேகரன் படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

காமராஜ்

கடந்த 2004ம் ஆண்டு காமராஜ் திரைப்படம் வெளியாகி இருந்தது. ரிச்சர்ட் மதுராம் என்பவர் காமராஜராக நடிக்க பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

இளையராஜா இசையமைப்பில் வெளியான இப்படத்தில் காமராஜராக நடித்த ரிச்சர்ட் மதுராம் இந்தியன் ஏர்லைன்ஸில் பணியாற்றியராவார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

பாரதி

கடந்த 2000ம் ஆண்டு வெளியான பாரதி படத்தை ஞான ராஜசேகரன் இயக்கியிருந்தார். முதலில் கமல்ஹாசனை தான் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

அதன்பின் பட்ஜெட் தொடர்பான காரணத்தால் நடிகர் ஷாயாஜி ஷிண்டே நடித்தார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

தலைவி

முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி தலைவி படம் வெளியானது.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதாவாக நடித்தார், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

800

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ திரைப்படத்தை இயக்குநர் ஶ்ரீபதி எடுத்திருந்தார். முரளிதரனின் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ புகழ் மாதுர் மிட்டல் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

சூரரைப் போற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்தது.

ஏர் டெக்கான் ஏர்லைன்ஸின் நிறுவனரான கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கினார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த Biopic படங்கள் | Best Biopics In Tamil Cinema

தற்போது இந்திய சினிமா இசையுலகில் சாதனை படைத்த இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் தனுஷ் நடிக்க உருவாகவிருக்கிறது.  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *