தன்னைப்போல் வெளியே அனுப்பப்பட்ட மீனா, நக்கலாக ரோஹினி சொன்ன விஷயம்… சிறகடிக்க ஆசை எபிசோட்

சிறகடிக்க ஆசை
அடடா இனி கதை சூடு பிடிக்கப்போகிறது என சொல்லும் அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. நேற்றைய எபிசோடில், முத்து வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் மீனா வர மாட்டேன் என கூறிவிட்டாள்.
அம்மாவிற்கு உங்கள் மீது இருக்கும் பாசத்தை போல அவளுக்கு பாசம் உள்ளது. உங்களுக்கு இப்போது விபத்து நடந்ததால் அதிகம் பயந்துவிட்டாள். சில நாட்கள் ஆகட்டும் என்கிறாள் என்றார். ஆனால் அண்ணாமலை மீனா வீட்டிற்கு வராதது எண்ணி மிகவும் வருந்துகிறார்.
மனைவிகளை பிரிந்த மனோஜ், மீனா, ரவி 3 பேரும் அவர்களை நினைத்து மிகவும் வருந்துகிறார்கள்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், உங்களை வீட்டைவிட்டு அனுப்ப ரோஹினி வேலையாக இது இருக்குமோ என ஸ்ருதி-மீனா பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் அங்கு ரோஹினி வருகிறார்.
இப்போது நாம் 3 பேரும் அந்த வீட்டில் இல்லை என ரோஹினி கூற சந்தோஷமா என மீனா கேட்கிறார். கணவரை பிரிந்த வலி என்பது இப்போது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் என கூற உடனே ஸ்ருதி நாங்கள் வீட்டிற்குள் ஈஸியாக செல்வோம், உங்களால் முடியவே முடியாது என்கிறார்.
அதைக்கேட்டதும் ரோஹினி, நீங்க ரெண்டு பேரும் எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்கனா உங்களுக்கு நல்லது, இல்லையென்றால் என மிரட்டும் வகையில் பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
பின் மீனா, ரோஹினி இப்படி திமிராக பேசுவதை பார்க்கும் போது அவர் மீது சந்தேகமாக இருக்கிறது என கூற முத்து எனக்கும் சந்தேகம் தான், முதலில் அந்த ஜோசியக்கார பெண் யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.






