தனுஷை காதலிக்கிறாரா மிருணாள் தாகூர்.. உண்மை இதுதான்!

தனுஷ் – மிருணாள்
முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார். இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுடைய பிரிவு அனைவருக்கும் சற்று அதிர்ச்சியை தந்தது.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிகை மிருணாள் தாகூரை காதலிப்பதாக தகவல்கள் பாலிவுட் வட்டாரத்தில் பரவியது. தொடர்ந்து பல விதமாக இதுகுறித்து ஊடங்கங்களில் செய்திகள் வந்தன.
இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை விளக்கம்
நடிகர் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. அண்மையில் எங்கள் இருவருக்கும் இடையிலான வந்தந்தில் பரவியது எனக்கும் தெரியும். அதை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வந்தது. சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் நிகழ்வில் தனுஷ் கலந்துகொண்டது குறித்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் நல்ல நட்பு உள்ளது. அஜய் தேவ்கன் தான் நடிகர் தனுஷை அந்த நிகழ்விற்கு அழைத்தார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக எங்களை இப்படி இணைத்து பேசுகிறார்கள்” என கூறியுள்ளார்.
இதன்மூலம் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் காதலிக்கிறார்கள் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.