தனது சகோதரன் திருமணத்திற்காக தொகுப்பாளினி டிடி அணிந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?

தொகுப்பாளினி டிடி
தொகுப்பாளினி டிடி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது முதல் பிரபலங்களை பேட்டி எடுப்பது வரை ஏராளமான நிகழ்ச்சிகளை அசால்ட்டாக நடத்தியவர்.
இப்போது எத்தனையோ தொகுப்பாளினிகள் அவரவர் ஸ்டைலில் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அதில் டிடியின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். ஒட்டுமொத்த தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரெட் டிடி என்றே கூறலாம்.
விலை விவரம்
சமீபத்தில் தொகுப்பாளினி டிடி வீட்டில் திருமண கொண்டாட்டம் நடந்துள்ளது. அவரது சகோதரருக்கு வெளிநாட்டு பெண்ணுடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
தனது சகோதரரின் திருமணத்திற்காக தேவையான அனைத்து விஷயங்களையும் டிடி தான் பார்த்து பார்த்து செய்துள்ளாராம்.
தனது தம்பியின் திருமணத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து செய்துவிட்டு கடைசி Cocktail கொண்டாட்டத்தில் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்ததாக பதிவு செய்திருந்தார் டிடி.
தற்போது டிடி திருமணத்திற்கு அணிந்திருந்த புடவையின் விலை பற்றிய தகவல் வலம் வருகிறது.
அவர் அணிந்திருந்த காஞ்சிபுரம் புடவையின் விலை ரூ. 19,500 என கூறப்படுகிறது.






