தக் லைப்.. சுத்த வேஸ்ட்.. கமல் மொத்த பணத்தையும் திருப்பி தரட்டும்: கர்நாடக விநியோகஸ்தர்

தக் லைப்.. சுத்த வேஸ்ட்.. கமல் மொத்த பணத்தையும் திருப்பி தரட்டும்: கர்நாடக விநியோகஸ்தர்


நடிகர் கமலின் தக் லைப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகவில்லை. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என கமல் சர்ச்சை ஆனதால் தக் லைப் படத்திற்க்கு எதிராக தடை போட்டனர். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியும் அதற்கு ஆதரவாக பேசினார்.

கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதியே கேட்ட நிலையில் கமல் மறுத்துவிட்டார். அதன் பின் உச்சநீதிமன்றம் சென்றார் கமல். மன்னிப்பு கேட்க சொன்ன கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

மேலும் சென்சார் செய்யப்பட்ட தக் லைப் படத்தை தடை செய்ய முடியாது எனவும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். படம் ரிலீஸ் ஆகும்போது எதிர்ப்பு வந்தால் அதற்கு அரசு தான் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

தக் லைப்.. சுத்த வேஸ்ட்.. கமல் மொத்த பணத்தையும் திருப்பி தரட்டும்: கர்நாடக விநியோகஸ்தர் | Thug Life Wont Release Now Karnataka Distributor

Utter வேஸ்ட்

 இந்நிலையில் தக் லைப் கர்நாடக ரிலீஸ் உரிமையை வாங்கி இருந்த VR Films நிறுவனத்தின் அரவிந்த் இது பற்றி பேசும்போது, ‘நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் தற்போது ரிலீஸ் செய்யப்போவதில்லை. இப்போது ரிலீஸ் செய்தால் utter வேஸ்ட்.’

‘கமல் அப்படி பேசியதால் தான் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதனால் அவர் தான் எனக்கு நஷ்டஈடு தரவேண்டும். பணத்தை திருப்பி தருவதாக ராஜ்கமல் நிறுவனம் கூறி இருக்கிறது. ஆனால் இன்னும் பணம் வந்து சேரவில்லை. பல கோடி ரூபாய் பணம் வர வேண்டி இருக்கிறது’ என தெரிவித்துள்ளார். 

தக் லைப்.. சுத்த வேஸ்ட்.. கமல் மொத்த பணத்தையும் திருப்பி தரட்டும்: கர்நாடக விநியோகஸ்தர் | Thug Life Wont Release Now Karnataka Distributor


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *