டி.ஆருக்கு இப்படியொரு பந்தமா?.. பிரபல தயாரிப்பாளர் உடைத்த ரகசியம்

டி.ஆருக்கு இப்படியொரு பந்தமா?.. பிரபல தயாரிப்பாளர் உடைத்த ரகசியம்


கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். அமீர் கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து சிகுடு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த் - டி.ஆருக்கு இப்படியொரு பந்தமா?.. பிரபல தயாரிப்பாளர் உடைத்த ரகசியம் | Star Open About Rajinikanth And Tr Relationship

இப்படியொரு பந்தமா?

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு டி.ராஜேந்தர் குறித்தும் ரஜினி குறித்தும் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” இந்த படத்தில் டி ராஜேந்தரை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் லோகேஷ் கனகராஜூக்கு வந்துள்ளது.

அதனால், ரஜினியிடம் இதை பற்றி சொல்லவும், அவர் சமீபகாலமாக டி.ஆருக்கு உடம்பு சரியில்லாமல் உள்ளதே? இந்த நேரத்தில் எப்படி டான்ஸ் ஆடுவார்? என்று கேட்டார்.

ஆனால் டிஆர், ரஜினிக்காக எதையும் செய்வேன் என்று சொல்லி சம்மதித்தார். முன்பு பிரபல கட்சியிலிருந்து ரஜினிக்கு எதிர்ப்பு வலுவாக இருந்தது.

அப்போது ரஜினிக்கு தன்னுடைய ஆதரவை முழுவதுமாக டிஆர் கொடுத்தார். இப்படியொரு நட்பு இருவருக்கும் இடையே இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.     

ரஜினிகாந்த் - டி.ஆருக்கு இப்படியொரு பந்தமா?.. பிரபல தயாரிப்பாளர் உடைத்த ரகசியம் | Star Open About Rajinikanth And Tr Relationship        


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *