டிமான்டி காலனி 3ம் பாகம் தொடங்கியது.. முதல் நாள் புகைப்படங்களை பாருங்க

2015ல் டிமான்டி காலனி, அதனைத் தொடர்ந்து 2024ல் டிமான்டி காலனி இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
ஒரு பாழடைந்த பங்களா அதை சுற்றி ஒரு பயங்கரமான ஹாரர் கதை என இயக்குனர் அஜய் ஞானமுத்து மிரட்டி இருப்பார். இரண்டாம் பாகத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மூன்றாம் பாகம்
இந்நிலையில் தற்போது டிமான்டி காலனி மூன்றாம் பாகத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கி இருக்கிறது.
பிரியா பவானி சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியிருக்கிறார்.