ஜெய்ஸ்வாலின் செயலால் கோபமடைந்த ரோஹித்: ஹொட்டலிலேயே விட்டுசென்ற குழு

ஜெய்ஸ்வாலின் செயலால் கோபமடைந்த ரோஹித்: ஹொட்டலிலேயே விட்டுசென்ற குழு


இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் புறப்பட தாமதமானதால், ரோஹித் ஷர்மா கோபமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



தாமதித்த ஜெய்ஸ்வால்

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, 14ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெற உள்ள 3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறது.



இதற்காக இந்திய அணியினர் அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டனர். வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து பேருந்து மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

Yashaswi Jaiswal/Rohit Sharma



யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர ஏனைய வீரர்கள் 8.30 மணிக்கே பேருந்தில் ஏறியுள்ளனர்.

ஆனால், ஜெய்ஸ்வால் வெளியே வர 20 நிமிடங்கள் தாமதப்படுத்தியிருக்கிறார். 

ரோஹித் ஷர்மா கோபம்

இதனால் கோபமடைந்த ரோஹித் ஷர்மா பேருந்தில் ஏறிவிட்டார். உடனே ஜெய்ஸ்வாலை விட்டுவிட்டு பேருந்து கிளம்பியுள்ளது. 

Yashaswi Jaiswal


பின்னர் ஹொட்டலுக்கு வெளியே வந்த ஜெய்ஸ்வால் பேருந்து இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



எனினும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் ஏறி அவர் விமான நிலையம் சென்றுள்ளார்.  

Rohit Sharma

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *