ஜிம்மில் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனம்.. வைரலாகும் நடிகை மிருணாள் தாகூர் வீடியோ

மிருணாள் தாகூர்
தெலுங்கில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீதா ராமம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது.
இதை தொடர்ந்து தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
ட்ரெண்டிங் வீடியோ
இந்நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது தாய்லாந்து ட்ரெண்டிங் பாடலான அண்ணனா பாத்தியே பாடலுக்கு செம க்யூட்டாக நடனம் ஆடுகிறார்.
அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.