ஜனனியிடம் மாட்டிக்கொண்ட அறிவுக்கரசி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றய ப்ரோமோ

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜனனி மற்றும் பெண்கள் நடத்த தொடங்கி இருக்கும் ஹோட்டல் தொழிலை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என குணசேகரன் தரப்பு பல முயற்சிகளை செய்து வருகிறது.
தற்போது அறிவுக்கரசி ஒரு மோசமான செயலை செய்ய துணிந்து இருக்கிறார்.
இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய ப்ரோமோ வீடியோவில் பெண்கள் செய்து வைத்து இருக்கும் சமையல் இருக்கும் பாத்திரத்தில் எதையோ அறிவுக்கரசி ரகசியமாக சென்று கலந்துவிடுகிறார்.
அப்போது ஜனனி அந்த பக்கம் வர அவரிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார் அறிவுக்கரசி. ப்ரோமோ வீடியோ இதோ பாருங்க.






