ஜனநாயகன் விஜய் போல் கையில் தீப்பந்தத்துடன் வந்த லெஜண்ட் சரவணன்.. மிரட்டலான லீடர் பட டீசர்..

லெஜண்ட் சரவணன்
லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லீடர். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பயல் ராஜ்புட், ஆண்ட்ரியா, ஷ்யாம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான தோற்றத்தில் ஆக்ஷன் ஹீரோவாக லெஜண்ட் கலக்குகிறார் என பலரும் கூறினார்கள்.
லீடர் டீசர்
இந்நிலையில், இன்று லீடர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் மிரட்டலான சண்டை காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை என அனைத்தும் பட்டையை கிளப்புகிறது.
மேலும் ஜனநாயகன் ட்ரைலரில் விஜய் தனது கையில் தீப்பந்தத்துடன் வந்த காட்சியை போலவே இந்த லீடர் படத்தின் டீசரில் லெஜண்ட் சரவணன் தனது கையில் தீப்பந்தத்துடன் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியுள்ளார்.
இதோ லீடர் படத்தின் டீசர்:






