ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது? ஆனாலும் இத்தனை சிக்கல்கள் உள்ளது!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானது? ஆனாலும் இத்தனை சிக்கல்கள் உள்ளது!


ஜனநாயகன்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் ஒருவழியாக ரிலீஸ் ஆவாகவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளிவரவிருந்த நிலையில், தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்து வெளிவராமல் இருந்தது.

இறுதியாக சமீபத்தில் இப்படத்தை தனிக்குழு பார்த்து சான்றிதழை வழங்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

ரிலீஸ் தேதி

இந்த நிலையில், வருகிற ஜூலை 24-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் இந்த வாரத்திற்குள் தணிக்கை சான்றிதழ் வந்துவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால் அதீத எதிர்பார்ப்பு உள்ளது.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் கசிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கிட்டதட்ட ஒரு கோடிக்கும் அதிகமானோர் இப்படத்தை இணையத்தில் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தயாரிப்பு நிறுவனம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு தற்போது விநியோகஸ்தர்கள் மிகவும் தயங்குவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இப்படத்திற்கு A சான்றிதழ் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி A சான்றிதழ் கிடைத்தால் படத்தின் வசூலும் பாதிக்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் படத்தை பார்க்க முடியாது. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால் ஜனநாயகன் திரைப்படம் எப்படியான வரவேற்பை பெறும் என்கிற சந்தேகத்தையும் இது எழுப்பியுள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *