ஜனநாயகன் உடன் மோதல்.. இது அண்ணன் – தம்பி பொங்கல் தான்: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 9ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அடுத்த நாளே போட்டிக்கு பராசக்தி படம் வருகிறது.
முதலில் ஜனவரி 14 தான் ரிலீஸ் தேதி என அறிவித்து இருந்த பராசக்தி படக்குழு அதன் பின் ஜனவரி 10ம் தேதியே வருவதாக அறிவித்தனர். இது அரசியல் காரணம் என்றும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றது.
அண்னன் தம்பி பொங்கல்
இந்நிலையில் விஜய் உடன் மோதுவது பற்றி சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். “இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல்தான். யார் என்னவேணும்னாலும் சொல்லட்டும்” என அவர் கூறி இருக்கிறார்.
ஜனநாயகன் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.






