சோபிதாவை அங்கு தான் சந்தித்தேன்.. சமந்தாவை பிரிந்தபின் நடந்ததை சொன்ன நாகா சைதன்யா

சோபிதாவை அங்கு தான் சந்தித்தேன்.. சமந்தாவை பிரிந்தபின் நடந்ததை சொன்ன நாகா சைதன்யா


நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதல் திருமணம் செய்த நிலையில் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அதன் பின் நடிகை சோபிதாவை அவர் காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். சமந்தாவுடன் இருக்கும் போதே அவர் சோபிதாவுடன் ஒன்றாக சுற்றி வந்தது தான் விவாகரத்துக்கு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்யும் புகைப்படங்களும் அப்போது வைரல் ஆனது.

அதன் பின் சோபிதா உடன் நிச்சயதார்த்தம் அவசரமாக செய்து வைத்தார் நாக சைதன்யாவின் அப்பா நடிகர் நாகார்ஜூனா.

சோபிதாவை அங்கு தான் சந்தித்தேன்.. சமந்தாவை பிரிந்தபின் நடந்ததை சொன்ன நாகா சைதன்யா | Naga Chaitanya Reveal How He Met Sobhita

2ம் காதல் வந்தது எப்படி?

இந்நிலையில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் Jayammu Nischayammu Raa என்ற ஷோவில் பங்கேற்ற நாக சைதன்யா தான் சோபிதாவை சந்தித்தது எப்படி என கூறி இருக்கிறார்.

“நாங்கள் இன்ஸ்டாக்ராமில் தான் சந்தித்துக்கொண்டோம். என் பார்ட்னரை அங்கே பார்ப்பேன் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன படங்களில் நடித்தார் என்பது எனக்கு தெரியும். ஒருமுறை நான் நடத்தும் cloud kitchen பற்றி பதிவிட்ட போது அதற்கு சோபிதா ஒரு எமோஜியை கமெண்ட் ஆக பதிவிட்டார்.”

“அதற்கு பிறகு தான் நான் சோபிதா உடன் சேட்டிங் செய்ய ஆரம்பித்தேன். அதன் பின் நேரில் சந்தித்தேன்” என நாக சைதன்யா கூறி இருக்கிறார். 

சோபிதாவை அங்கு தான் சந்தித்தேன்.. சமந்தாவை பிரிந்தபின் நடந்ததை சொன்ன நாகா சைதன்யா | Naga Chaitanya Reveal How He Met Sobhita


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *