சேயோனுக்கு அடுத்த படம் இவருடன்தான்.. சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான பராசக்தி-க்கு சுமாரான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. அடுத்து அவர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
முருக பக்தர் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருக்கும் அந்த படத்தின் டீசரும் வந்து வைரல் ஆகி இருந்தது.
அடுத்த படம்
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் தாய்கிழவி படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்து இருக்கிறார்.
அந்த படத்தின் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் “சேயோனுக்கு பிறகு எனது அடுத்த படமும் சிவகுமார் முருகேசன் உடன் தான்” என அறிவித்து இருக்கிறார்.






