செஸ் சாம்பியன் பரிசுத்தொகை; அடேங்கப்பா.. குகேஷ் வரி மட்டும் இவ்வளவு கட்டணுமா?

செஸ் சாம்பியன் பரிசுத்தொகை; அடேங்கப்பா.. குகேஷ் வரி மட்டும் இவ்வளவு கட்டணுமா?


சாம்பியன்ஷிப் தொடரில் வென்ற குகேஷுக்கு விதிக்கப்படும் வரி குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

பரிசுத்தொகை



சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரன் ஆகியோர் களமிறங்கினர்.

செஸ் சாம்பியன் பரிசுத்தொகை; அடேங்கப்பா.. குகேஷ் வரி மட்டும் இவ்வளவு கட்டணுமா? | Tax Details Gukesh Play After Winning The Chess



மொத்தம் 14 சுற்றுகளில், குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 வென்றிருந்த நிலையில், மற்ற போட்டிகள் டிராவில் முடிந்தது. இதனால் இருவரும் தலா 6.5 புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.

வரி விவரம் 

கடைசி போட்டி 14வது சுற்றுப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார்.

இந்த தொடரில் இந்த வெற்றிக்குப் பின், குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. மேலும் அவர் வென்ற மற்ற பரிசு தொகைகள் காரணமாக இவர் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் வென்றுள்ளார்.

gukesh


ஆனால் இவருக்கு செஸ் வரி, அடிப்படை வரி, சர்ஜ் வரி ஆகிய 3 வரிகள் விதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும். அதன்படி மொத்தமாக 6 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்படும்.


இதில் மெயின் தொடரில் வென்ற 11.45 கோடி ரூபாயை கணக்கில் கொண்டால் மட்டுமே நான்கரை கோடி ரூபாய் வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *