செல்லமே பட குட்டி ரீமாசென் யார் தெரியுமா.. இப்போது பிரபல சீரியல் நடிகை தான்!

செல்லமே படத்தில் ரீமாசென் – பரத் ஆகியோரின் இளம் வயது காட்சிகளில் குட்டி ரீமா சென் ஆக நடித்தது யார்? முழு விவரத்தை பார்க்கலாம் வாங்க.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது சின்னத்திரையில் அதிகம் பேரை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
கூட்டு குடும்ப கதை, அதில் வரும் பிரச்சனைகள், எதிர் வீட்டில் சண்டை என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இதில் பாண்டியனின் கடைசி மகள் அரசி ரோலில் நடித்து வருபவர் சத்யசாய் கிருஷ்ணன்.
இத்தனை படங்களில் நடித்தவரா
அரசியாக நடித்து வரும் சத்யசாய் ஏற்கனவே ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறாராம்.
விஷாலின் செல்லமே படத்தில் சின்ன வயது ரீமா சென் ஆக நடித்தது அவர் தான் . மேலும் சில படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.