சூர்யா நடித்த ஆயுத எழுத்து படத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளாரா?.. போட்டோவை பாருங்க

ஆயுத எழுத்து
கடந்த 2004ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆயுத எழுத்து.
இப்படம் இனாரிட்டுவின் அமரோஸ் பெரோஸ் படத்தின் திரைக்கதை வடிவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம்.
சூர்யா, மாதவன், சித்தார்த் 3 ஹீரோக்கள், வெவ்வேறு வாழ்க்கை முறையை கொண்ட இந்த 3 கதாபாத்திரங்களின் கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டு பின் மூவரின் வாழ்க்கையும் ஒரே புள்ளியில் இணையும்.
கதையை தாண்டி ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே இப்படத்தில் செம ஹிட்.
கார்த்தி
தற்போது நடிகர் கார்த்தியும் ஆயுத எழுத்து படத்தில் நடித்துள்ளாரா என்ற சந்தேகத்துடன் தான் இந்த பதிவை காண வந்திருப்பீர்கள். இந்த ஆயுத எழுத்து படத்தில் கார்த்தி பணிபுரிந்துள்ளார், இதில் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சித்தார்த்துடன் கார்த்தி இருக்கும் போட்டோ இதோ,