சூர்யாவுக்கு சின்ன வயதில் இருந்தே அந்த நடிகை மீது Crush.. போட்டுடைத்த நடிகர் கார்த்தி

நடிகர் சூர்யா தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இருப்பினும் சமீப காலமாக அவர் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
கங்குவா படம் பெரிய தோல்வி அடைந்த நிலையில் அவரது அடுத்த படமான ரெட்ரோ படமும் நெகடிவ் விமர்சனங்களை தான் பெற்றது. இருப்பினும் படம் 200 கோடிக்கும் மேல் சம்பாதித்ததாக சூர்யா அறிவித்து இருந்தார்.
பிரபல நடிகை மீது கிரஷ்
நடிகர் சூர்யாவுக்கு சின்ன வயதில் இருந்தே நடிகை கௌதமி மீது Crush இருக்கிறதாம். அதை சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி சில வருடங்களுக்கு முன் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
“சூர்யாவுக்கு ஒரு நடிகையை ரொம்ப பிடிக்கும். சிக்குபுக்கு ரயிலே பாடல் தெரியுமா” என கூறி இருக்கிறார். அந்த பாடலில் வரும் கௌதமி மீது தான் சூர்யாவுக்கு முதல் crush இருந்தது என கார்த்தி கூறி இருக்கிறார்.