சூர்யாவின் கருப்பு எப்போது ரிலீஸ்.. RJ பாலாஜி சொன்ன தகவல்

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் கருப்பு எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்தாலும் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் தாமதம் ஆகிக்கொண்டே இருக்கிறது.
‘கருப்பு காத்திருப்புக்கு தகுதியான படம் தான்” என இசையமைப்பாளர் முழு படத்தையும் பார்த்துவிட்டு சாய் அபயங்கார் தெரிவித்து இருந்தார்.
RJ பாலாஜி பதில்
இந்நிலையில் கருப்பு படம் எப்போது தான் ரிலீஸ் ஆகும் என RJ பாலாஜியிடம் கேட்டதற்கு “தேர்தல் முடிந்த பிறகு கோடை காலத்தில் கருப்பு படம் ரிலீஸ் ஆகும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் வலிமை அப்டேட் போல இப்போது எல்லோரும் கருப்பு அப்டேட் கெட்டுக்கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.






