சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை


சசிகுமார்

திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார்.

சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததால் பிரபல நடிகராக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன்,உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை | Sasikumar In Super Singer Show Promo Goes Viral

வாக்குவாதம்

இந்நிலையில், விஜய் டிவியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் ஷோவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சசிகுமார்.

இந்த வாரம் 90 – ஸ் ஸ்பெஷல் வாரம் என்பதால் நடுவர் மனோ சின்னதம்பி திரைப்படத்தில் இடம் பெற்ற “தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே” என்ற பாடலை பாடுகிறார்.

அப்போது, அந்த பாடலில் இடம் பெற்ற தாய் அடிச்சு படிச்சது இல்லையா? தாய் அடிச்சு வலிச்சது இல்லையா? என்று சசிகுமார் கேட்க மனோ இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.   

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை | Sasikumar In Super Singer Show Promo Goes Viral


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *